நவகிரக மூலிகைகளின் அற்புதம்

நவகிரகங்களை சாந்தி செய்து நவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகைகள்


ஒவ்வொருவரின் ஜாதக மகாதிசை கோச்சார காலசக்கர புத்தி அந்தர சூட்சமங்கள் கெட்டு மனிதர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் சமயம், அந்த அந்த கிரகங்களுக்கு உரிய மூலிகைகளைக் கொண்டு அந்த கிரகங்களுக்கு சாந்தி செய்து அந்த மூலிகையை கவசம் செய்து நம் உடம்பில் படும்படி உபயோகித்து பூஜித்து வர அந்த கிரகங்கள் திருப்தி அடைந்து மனிதர்களுக்கு கஷ்டங்களை தீர்த்து பரிபூரண நன்மைகளை அளிக்கிறது.


சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள், மேதைகள், தவசிகள் யாவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து இதற்கு பரிகாரமாக சில தெய்வீக மூலிகைகள், மனிதன் வளமாக வாழ்வதற்கும், அந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளார்கள். அதை நம் முன்னோர்கள், அனுபவபூர்வமாக உணர்ந்து கிரக பாதிப்புகள், தோஷங்கள், செய்வினை கோளாறுகள், எதிரிகளால் வசப்பட்டு புத்தி பேதலித்த நிலையிலிருந்து விடுபட என்று நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு வாழ வழிகாட்டியுள்ளார்கள்.


அதன்படி நவக்கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபட அந்த அந்த கிரகங்களை சாந்தி செய்து அதற்கு உண்டான மூலிகை ரட்சைகள் நம் தேகத்தில் தரித்து பூஜித்து வர, அந்த அந்த கிரகங்கள் கண்டிப்பாக நம் மீது கருணை கொண்டு நமக்குத் தேவையான நன்மைகளை செய்வார்கள்.சூரியதிசை (சூரிய புஷ்பாங்க மூலிகை)6 வருடங்கள்

சூரியதிசை, சூரியபுத்தி சூரிய பகவானை லக்னமாகக் கொண்டவர்களும் அதனால் காரியத்தடை, அரசாங்கத் தொல்லை, ஜீவனத்தடை, கோர்ட் விவகாரங்களில் தடை ஏற்பட்டவர்களும் உஷ்ண சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த தெய்வீக மூலிகை ரட்சையை அணிந்து கொண்டால் சூரிய பகவானால் ஏற்படும் சகல விதமான தொந்தரவுகளிலிருந்தும் உடனே நிவாரணம் ஏற்பட்டு சகல ஜஸ்வர்யங்களையும் தரக்கூடியது.

இந்த மூலிகை சூரிய திசை காலமான 6 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


சந்திரதிசை (மகாசோமன் மூலிகை)10 வருடங்கள்

சந்திரதிசை, சந்திர புத்தி சந்திரனை லக்னமாக அமைய பெற்றவர்கள் சந்திரபகவானின் பலம் குறைந்து அமைய பெற்றவர்கள் பலவிதமான இன்னல்களை அடைவார்கள். தெய்வ சிந்தனை இல்லாமை எதிலும் வெறுப்பு, தோல் சம்பந்தப்பட்ட வியாதி, பைத்தியம் சித்தக் கோளாறு, ஸ்தீரிசாபம், செய்வினை தோஷங்களும் உடையவர்கள் இந்த சந்திர மூலிகையை உபயோகித்து அற்புத பலன் பெறலாம்.

இந்த மூலிகை சந்திர திசை காலமான 10 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது.


செவ்வாய் திசை (மங்கள சஞ்சீவி மூலிகை)7 வருடங்கள்

செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி செவ்வாய் பகவானை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திருமணத்தடை, மாங்கல்யதோஷம், புத்திரதோஷம், சகோதரதோஷம், இரத்த பித்த தோஷம் உடையவர்கள்,மஞ்சள் காமாலை நோய் உடையவர்கள், முறை ஜீரம் உடையவர்கள், கெட்ட கனவு உடையவர்கள், வீண் கஷ்ட, நஷ்டம், கோர்ட், வியாஜ்ஜிய தோஷம் உடைவர்கள், கிஸ்ட்டிரியா என்னும் நோயை உடையவர்கள், மன பலவீனம் உள்ளவர்கள் யாவரும் இந்த மூலிகை ரட்சையை உபயோகிக்க கைமேல் பலன் கொடுக்கக்கூடிய சக்தி படைத்தது.
இந்த மூலிகை செவ்வாய் திசை காலமான 7 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


புதன்திசை (சௌமிய மூலிகை)17 வருடங்கள்

புதன்திசை, புதன்புத்தி புதனை லக்னமாக கொண்டவர்களும் கலை, கல்விகளில் பிரகாசிப்பதற்கும் வீட்டில் சுபிட்சம் பெருக வீடு, வாகனம் வாங்குவதற்கும், வியாபாரத்தில் நஷ்டம் அடைபவர்கள் பந்து கலகத்தால் நஷ்டம் அடைபவர்கள், எவ்வளவு வந்தாலும் நஷ்ட கஷ்டத்தை உடையவர்கள்,ஆகிய சர்வ விஷயங்களுக்கும் இந்த மூலிகை அபாரமான செல்வாக்கு நினைத்ததை சாதிக்கும் தன்மை ஆகியவற்றை உடனே கொடுக்கும்.

இந்த மூலிகை புதன்திசை காலமான 17 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


குருதிசை (தட்ஷிணா மூர்த்தி மகாபத்ர மூலிகை)16 வருடங்கள்


குருதிசை, குருபுத்தி குருபகவானை லக்னமாக கொண்டவர்களும் குருவை தனபாக்கிய லாபதிபதிகளாக கொண்டவர்களுக்கும்,திருமணத்தடை, புத்திரவிருத்தி இல்லாமை, அல்லது புத்திரர்களால் சஞ்சலத்தை அடைபவர்கள், ஸ்திர புத்தி இல்லாதவர்கள், பண விஷயம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் உடையவர்கள், வீண் கஷ்ட நஷ்டத்தை உடையவர்கள், சித்தி இல்லாதவர்கள், பசு, பால் பாக்கியம் இல்லாதவர்கள்,குடும்பத்தில் அமைதி இல்லாதவர்கள் குருவின் கோச்சாரத்தால் ஏற்படும் சகல நஷ்டங்களும் நீங்க சர்வ ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சக்தி கொண்டது இந்த மூலிகை.

இந்த மூலிகை குருதிசை காலமான 16 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


சுக்கிர திசை (தான வேஜ்ஜய மகா மூலிகை)20 வருடங்கள்

இது சுக்கிர பகவானால் ஏற்படும் சகல விதமான தோஷ நிவர்த்திக்கும் மற்றும் சுக்கிரதிசை, சுக்கிரபுத்தி, சுக்கிர பகவானை லக்னமாக அமைய பெற்றவர்கள் பணப் பிரச்சனை,ஆண்-பெண் உடல் உறவு கோளாறுகள், மலட்டுத்தன்மை, பெண்களுக்கு மாதவிடாய், வெள்ளைபடுதல் போன்ற கோளாறு உடையவர்களுக்கு இந்த மூலிகை ஒரு அரிய வரப்பிரசாதம். பூரண பலனைத் தரக்கூடியது.

இந்த மூலிகை சுக்கிர திசை காலமான 20 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


சனிதிசை (நீலபானு மூலிகை)19 வருடங்கள்

சனிதிசை, சனிபுத்தி, சனி பகவானை லக்னமாக கொண்டவர்கள் ஏழரைநாட்டுசனி, அஷ்டமத்துசனி, கண்டகசனி இவைகளினால் உண்டாகும் துயரைப் போக்கவும், செவ்வாய்தோஷம், சர்ப்ப சாபம், ஸ்ரீ சாபம், கோசாபம், மாதுர்பிதுர்சாபம் இப்படி சகல சாபங்களையும், தோஷங்களையும் போக்கி சர்வ காரியங்களையும் சிந்திக்க வைத்து மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க செய்யும் அபூர்வ சக்தி படைத்தது இம்மூலிகை.

இந்த மூலிகை சனிதிசை காலமான 19 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


ராகுதிசை (ஸ்ரீ துர்க்கா மூலிகை)18 வருடங்கள்

ராகுதிசை, ராகுபுத்தியால் ஏற்படும் சகல தோஷமும் விலகிவிடும். சர்ப்பாதி தோஷம் விலகிவிடும். பூர்வ ஜென்மாதி சாபங்கள் நிவர்த்தியாகிவிடும். சகல காரியங்களிலும் ஒரு திருப்பமும், நன்மையும், சுகபோக சௌக்யாதிகளும் உண்டாகிவிடும். ராகு பகவானை லக்னமாக கொண்டவர்கள் வலிப்பு, செய்வினை தோஷம், காத்து, கருப்பு, சேஷ்டை, துர்சொப்பனம் இன்னது என்று நிர்ணயிக்க முடியாத வியாதிகள், துன்பங்கள், வீண் மனச் சஞ்சலங்கள், சத்ரு தொல்லைகள், பணமுடை, நித்திய தரித்திரம், குல தெய்வ அருள் இல்லாமை, வீண் மனக்கசப்பு, துன்பம், துயரம், காரியநாசம் இப்படி சகல விதமான கோளாறுகளும் நீங்க ராகு பகவானின் பரிபூரண அருள் பெற்ற இந்த மூலிகை பலத்தால் துன்பங்கள் நீங்கி பெரும் மேன்மையடையச் செய்யும்.

இந்த மூலிகை சராகுதிசை காலமான 18 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


கேது திசை (ஞான மூலிகை)7 வருடங்கள்

கேதுதிசை, கேதுபுத்தி, கேது பகவானை லக்னமாக கொண்டவர்கள் வாழ்வில் பிடிப்பு இல்லாமை,வீண் மனஸ்தாபங்கள், தெய்வகுற்றம் உடையவர்கள், எவ்வளவு உழைத்தும் நல்ல பெயர் எடுக்க இயலாதவர்கள், மேல் அதிகாரிகளின் தொல்லையை உடையவர்களுக்கும் இந்த மூலிகை பரிபூர்ணமான பலனை கொடுக்கும் சர்வ சுபமங்களம் ஏற்படும்.

இந்த மூலிகை கேது திசை காலமான 7 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது


மேலே உள்ள மூலிகைகள் ேவைப்படுவோர் எந்த மூலிகை தேவை என்பதை விளக்கமாக கடிதம் மூலமாகவோ,இமெயில் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவித்து விபரங்கள் பெற்று PAYMENT DETAILs பகுதியில் பார்த்து பணத்தை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள

ஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி

Sri Vetrivel Jothidalayam Trust, Palani

  Phone -   போன்
:
04545 – 245840
 Cell  -   செல்
:
+91 94430 45840,
+91 75980 38063
 Email ID  - மின்னஞ்சல்
:
velanvak@gmail.com,
contact@vetriveljothidalayam.com

  Address :
  41-A, Jawahar Street,
  Opp to Thiru Aavinangudi Temple,
  Adivaram, Palani,
  Dindugal(D.T)-624601,
  Tamilnadu State, South India.
  முகவரி :
41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.