அஞ்ஜனங்கள் (மை)

ஜகன் மாதாவால் சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜகத்தில் மிக மிக முக்கியமாக நவகிரகங்களையும் படைத்து அந்த நவகிரகங்களைக் கொண்டே அவரவர்களின் ஊழ்வினை கர்ம பயனுக்குத் தக்கபடி ஜாதகமும் அமைந்து அவரவர்களுக்கு தக்கப்படி பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு தக்கபடியே கிரகங்கள் சகலரையும் ஆட்டிப்படைக்கிறது.


நவகிரகதோஷங்கள்,செய்வினைகளால் ஏற்பட்ட கோளாறுகள், பார்வை தோஷம் மற்றும் இடையூறுகளிலிருந்து நிவர்த்தி பெற ஆதிகாலத்தில் பல முனிவர்கள், ஞானிகள், சித்தர்கள் யாவரும் தங்கள் அனுபவத்தில் பார்த்து இதற்கு பரிகாரமாக சில தெய்வீக தன்மையுள்ள மூலிகைகள் அஞ்ஜனங்கள்(மை) பற்றி கூறியுள்ளார்கள். மனிதன் வளமாக வாழ்வதற்கும்,தன்னை காத்துக் கொள்வதற்கும் அந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளார்கள்.


அதன்படி, அந்த அந்த கிரகங்களுக்கு பிரீதியான மூலிகைகளின் உதவியை கொண்டு அந்த அந்த கிரகங்களை சாந்தி செய்து மூலிகை அஞ்ஜனங்கள்(மை) தேகத்தில் தரித்து பூஜிக்க, நிச்சயம் அந்த கிரகங்கள் திருப்தி அடைந்து மக்களுக்கு சகல நன்மைகளையும் செய்வார்கள் என கருமாரி, கோமாரி, மாரியம்மன், பூங்காத்தா, தேவிவராகி, வைஷ்ணவி, சாம்பவி, சண்டி,காளி,மாளி,கோளி இப்படி சகல பெண் தெய்வங்களும் அருள்கின்றார்கள்.1.சரஸ்வதி அஞ்ஜனம் (மை)

இந்த அஞ்ஜனம் "மை" ரூபமாகவும் உபயோகம் செய்யலாம். அல்லது சாம்பிராணிபோல தூபமாகவும் போட்டு வாசனைப் பிடிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் ஞாபக சக்தியில்லாமை, சபைக்கூச்சம் (பெரியக்கூட்டம், ஜனங்கள் நிறைந்தவர்களைப் பார்த்ததும் பயம், படபடப்பு) பேச முடியாதவர்கள், தத்துவாய், சரளமாக பேச முடியாதவர்கள், பேச முடியாதபடியிருக்கும் குரல் வியாதியஸ்தர்கள், நினைவில் எதையும் நிறுத்தி வைக்க முடியாதவர்கள், படிப்பில் ஊக்கம் இல்லாதவர்கள் இப்படிப்பட்ட குறையுடையவர்கள் ஆண், பெண் சகலரும், குழந்தைகள் முதல் வயதான பெரியோர்கள் வரை சகல பேர்களுக்கும் சஞ்சீவி போன்றது. அலுவலகத்தில்; மறதியாகவும், நினைவாற்றலும் இல்லாதவர்களுக்கும் இது ஒர் தெய்வீக வரப்பிரசாதமாகும


உபயோகிக்கும் முறை:

துளி அஞ்ஜனத்தை எடுத்து 2 புருவங்களில் வைத்தால் போதும். ஞானம் பெருக்கெடுத்து வரும். நினைவாற்றல் பெருகும், அபாரமான அறிவு ஒளி வீசும். சரஸ்வதி தேவியின் பரிபூரண கிருபை ஒளிவீசும்.


2.மகாலட்சுமி அஞ்ஜனம்(மை)

சகல கிரக உபாதைகளிலிருந்தும் விடுபட்டு இஷ்டசித்தி, தொழில் மேன்மை, தனசமர்த்தி, காரியஅனுகூலம் அடையச்செய்யும். வியாபாரம், உத்தியோகம், தொழில் முதலிய எல்லாத் துறைகளிலும் ஒருவர் விரும்பும் தனலாபத்தை மிகச் சுலபமாக அடையும்படி செய்வதில் சக்தி பெற்றது. பணக்கஷ்டம்,துர்மரணம், செய்வினைதோஷம், பிசாசுதொல்லை, கர்ம வியாதி, சாபபீடிதம் இவை சகலமும் போகும். இதில் அடங்கிய மகாவிஜய தனாகர்ஷன மூலிகையின் மகிமை பெருமை வாய்ந்தது. எந்த வயதினரும், எல்லா மதத்தினரும் ஆண், பெண் சகலரும் இதை உபயோகம் செய்யலாம். இதனால் அதிர்ஷ்டவிருத்தியும், இஷ்ட காரியசித்தியும் உண்டாகும்.


உபயோகிக்கும் முறை:

தினம் கொஞ்சம் எடுத்து புருவம் இரண்டிலும் வைத்து வரலாம். வியாபார ஸ்தலத்திலும் நுழைவாசல் படியிலும் உட்பக்கமாக தடவிவர சர்வ மகாலட்சுமி கடாட்சமும் உண்டாகும். சர்வ தரித்திரம் உடையவர்கள் இதை தினமும் நெற்றிக்கு இட்டுக் கொண்டுவர சர்வ சௌக்கியம் உண்டாகிவிடும். இதை தீட்டுபடாமல் உபயோகம் செய்யவேண்டும்.


3.மகா நவசக்தி அஞ்ஜனம்(மை)

பூர்வ கர்மதோஷத்தால் ஏற்படும் கர்ம வியாதிகள் எதுவாயினும் பீடிக்காமல் தடுக்கும். வெண்குஷ்டம், மயக்கம், உடல் சோர்வு, மர்ம ஸ்தானங்களில் ஏற்படும் வியாதிகளைப் போக்கவல்லது. சத்ரு உபாதைகள், துற்செயல்கள் எதுவும் பாதிக்காமல் செய்யும். இதன்மூலம் திடீர் அதிர்ஷ்டங்களை கொடுக்கவல்லது. கிரஹ தோஷம் இருந்தால் விலகிவிடும்.


உபயோகிக்கும் முறை:

நெற்றியிலிட்டு வரலாம் அல்லது உச்சந்தலையில் தடவிவர ஜெயம் உண்டாகும். நினைத்தது நினைத்தபடி நடக்கும்.


4.சர்ப்ப அஞ்ஜனம்(மை)

இதனால் சர்ப்பதோஷம், ராகு, கேது, திசைபலன் தராத தோஷம், திருமணத்தடை, கோர்ட், வியாஜ்ஜியவழக்கு, ராஜாங்கத்தொல்லை, கெட்டகனவு, வீண்பயம், நடுக்கம், எதிரிசெய்யும் மரணம், பேதனம், வசியம், மாரக பந்தனம், மோகனம், பில்லி, சூன்யம், ஏவல், துர் உச்சடானம், பேய், பிசாசுத்தொல்லை, கலவரம், இந்திரிய ஸ்கலிதம், வெடவெடப்பு, நாக்கு உலர்ந்து போதல், மூதேவி தோஷம், துன்பம், சத்துருத்தொல்லை இது போன்ற 78 வகையான துன்பங்களை அடியோடு ஒழித்து பரிபூரண சுகம் தரக்கூடிய மை இது.


உபயோகிக்கும் முறை:

மேற்படி குறையாடுகள் கொண்டவர்களுக்கு தினம் காலை, மாலை நெற்றியில் துளி வைக்கவும். தலையில் உச்சி பாகத்திலும் தடவிக் கொண்டு வரலாம். இதுபோல 48 நாட்களுக்கு உபயோகம் செய்தால் வாழ்க்கைப்பாதை அடியோடு மாறும். நல்ல கனவுகள் உண்டாகும். முகத்தில் நல்ல தேஜஸ் உண்டாகும்.


5.பாலாரிஷ்ட தோஷ அஞ்ஜனம்(மை)

இதனால் பபூர்வ ஜென்மசாபம், ஸ்தீரிசாபம், கோசாபம், தெய்வசாபம், மாதுர்பிதுர்சாபம், இப்படிப்பட்ட சாபங்களால் குழந்தைச் செல்வம் இல்லாத தோஷங்களை நிவர்த்தி செய்யும் யோகமுடையது. செவிடு, குருடு, கூன், நொண்டி இப்படிப்பட்ட ஊனமுடைய குழந்தைகளின் தோஷத்தையும் போக்கக்கூடிய அபூர்வ சக்தி படைத்தது. சகல புத்திரசோகம், புத்திர துக்கம், புத்திரநாசம் இவைகளை நிவர்த்தி செய்யும் சக்தி படைத்தது இந்த அஞ்ஜனம்.


உபயோகிக்கும் முறை:

தினம் எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.


6.புத்திர தோஷ நிவர்த்தி அஞ்ஜனம்

உலகில் மனிதனாகப் பிறப்பதே அரிது. அப்படி மனிதனாகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, ஊமை, நொண்டியாக இல்லாமல் பிறப்பது அரிது.


நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து திருமணமாகி மனைவியுடன் இன்பமாக வாழ்க்கை நடத்தி புத்திரபாக்கியத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் இல்லாதவள் வீட்டில் குடி தண்ணீர் சாப்பிட்டாலும் பெரும்பாவம் என்று சாஸ்திரம் வர்ணிக்கிறது. ஸ்தீரிசாபம், கோசாபம், மாதுர்பிதுர்சாபம், சர்ப்பசாபம், தெய்வசாபம் என பஞ்ஜசமாபாதக சாபங்கள் மனிதனுக்கு ஏற்பட்டால் அது மூன்று தலைமுறைகளுக்கும் வெகுவாக தாக்கிவிடுகிறது. இப்படிப்பட்ட சாபம் இருப்பவர்களுக்கு பிள்ளைகள் பிறப்பது இல்லை. அப்படியே பிறந்தாலும் பலகுறைகளுடன் பிறந்து வாழ்க்கையே நரகமாகி விடுகிறது. இப்படிப் பட்டவர்களுக்காகவே மேற்படி புத்திரதோஷ நிவர்த்தி அஞ்ஜனம் ஸ்ரீ நாரத மகரிஷpயால் உபதேசிக்கப்பட்டதாக ஸ்ரீசுகமக "ரிஷி வாக்கியம்" என்னும் நூலில் கூறப்படுகிறது. புத்திரர் இல்லாத ஆண், பெண்கள், (அ) ஊனமுற்ற குழந்தையை உடையவர்களும், ஜாதகப்படி அவரவர் கால, சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்பட்டால் நிச்சயம் நிவர்த்தி உண்டு. இந்த அஞ்ஜனம் பூர்வ ஜென்ம பாவத்தையும் போக்கி அதே சமயம் உடலில் இருக்கும் குறைகளையும் போக்கும்.


உபயோகிக்கும் முறை:

கணவன் மையை நெற்றியிலும், மனைவி உச்சந்தலையிலும், நெற்றியிலும் வைத்துக் கொள்ளலாம்.


7.மகா சுதர்சன சத்துரு பீட நிவாரண அஞ்ஜனம்

இன்றைய உலகில் அனைவருக்கும் ஒரு வகையில் ஜாதகக் கிரக கோளாறுகளோ அல்லது விதிவசமோ மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் சத்ருக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


துஷ்டர்களைக் கண்டால் தூரவிலகு என்பார்கள் பெரியோர்கள். நாம் நம்மை சத்ருபயம், உபாதையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதனால் சத்ருவின் மூலம் செய்யப்படும் கெடுதல்கள் உங்களைப் பாதிக்காது. எப்படிப்பட்ட எதிரியாயினும் அவரை தோற்கடித்து விடும் இந்த அஞ்ஜனம். சத்துரு, சண்டை சச்சரவு, கோர்ட்டு, வியாஜ்ஜியம் இந்த தொல்லைகள் அடியோடு நீங்கி உங்களுக்கு சர்வ ஜெயத்தையும் தரக்கூடியது. நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் யோகமும், அதிர்ஷ்டமும், சுக அனுகூலங்களும் ஏற்படும். நல்ல தனவசதி, தொழில் மேன்மை, தெய்வ அனுகூலம், லட்சுமி கடாட்சம், அதிர்ஷ்டம் இவைகள் உண்டாகும்.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளவும். அல்லது சிறிது எடுத்து உச்சந்தலையில் தடவிக் கொள்ளவும்.


8. மங்கள ரதிபதி வசீகர அஞ்ஜனம்;

உலகில் ஆணும், பெண்ணும் சேர்வதே தர்மம். இல்லறம் இல்லையேல் நல்லறம் கிடையாது. புருஷனுக்கு மனைவியும், மனைவிக்கு புருஷனும், வசியமாகவும், அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால்தான் வாழ்வு மலரும். சுகம் உண்டாகும்.


எத்தனைதான் ஜாதகம் பல பார்த்தாலும், பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும், பல வருஷமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், விதிவசமோ அல்லது காலபலனின் வினையோ அல்லது விதியின் விளையாட்டோ தெரியவில்லை. 100க்கு 85 பேர் கணவன், மனைவி ஒற்றுமை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதோடு, கணவன், மனைவி ஒற்றுமை இல்லாமல் சிலர் பிரிந்து விடுவதும் உண்டு.


சிலர் கீரி, பாம்பு போல பகைமை ப10ண்டு எப்படியாவது மனைவியைப் பெட்டிப்பாம்பாக ஆக்கிவிட வேண்டுமெனவும், கணவன்மார்களும் எப்படி ஆவது பொம்மைபோல ஆக்கிவிடவேண்டும் என்று மனைவிமார்களும் நினைக்கின்றனர். இதில் தவறே கிடையாது. இந்த அஞ்ஜனம் ஒற்றுமை இல்லாத தம்பதிகளை ஒன்று சேர்ப்பதில் நிகரற்றது, ஒவ்வொருவரும் உபயோகிக்கலாம். எப்பேர்ப்பட்ட சண்டை, மனவேற்றுமை, மன நிம்மதி இல்லாமை ஒருவருக்கொருவர் வேற்றுமையாக இருப்பினும் இவை நீங்க இது வரப்பிரசாதமாகும்.


உபயோகிக்கும் முறை:

மங்கள ரதிபதி வசீகர அஞ்ஜனத்தை தினம் குளித்த பின்பு துளி சுண்டு விரலில் எடுத்து நெற்றியில் துளியும் உச்சந்தலையில் சிறுதுளி வைத்துக் கொள்ளலாம். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் வைக்கலாம். துளி எடுத்து 3 வெற்றிலையில் மடித்து ஏலக்காய், கிராம்பு, பாக்கு, சுண்ணாம்பு இவைகளுடன் பீடாபோல வைத்து உண்ணவும் செய்யலாம். இது ஆண், பெண், கணவன், மனைவி உறவை அதிகப் படுத்தும். மிகவும் சிறந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள முறையாகும். இது கெடுதலுக்கோ, அகால முறைக்கோ, குறுக்கு வழிக்கோ இது உதவாது.


9. மன வசீகர – ஸ்திரீ வசீகர –மன்மத போக விருத்தி மகாஅஞ்ஜனம்

மனவசீகரம், காதலில் தோல்வியுற்றவர்கள், போகசக்தி இல்லாதவர்கள், ஆண்மையை இழந்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், சஞ்சலப்புத்தி உடையவர்களுக்கு இந்த அஞ்ஜனம் மிகச் சிறந்தது. போகசக்தியை அதிகரிக்கும். தேஜஸ் ஏற்பட்டு தேககாந்தி உண்டாகும்.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியிலும், புருவத்திலும் இட்டுக் கொள்ள வேண்டும். 


10. மகாலட்சுமி குபேரவசிய மகா அஞ்ஜனம்

இந்த அஞ்ஜனம் மிக அபூர்வமானது. ஸ்ரீ போகரால் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்ட மகா அஞ்ஜனமாகும். மேலும் இந்த "மகாலட்சுமி குபேரவசிய மகா அஞ்ஜனம்" பாகவதத்தில் கிருஷ்ணபகவானால் தயார் செய்யப்பட்டு தேவர்களுக்கு சமமான பஞ்சபாண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு பெரும் பலன் அடையப்பட்ட மகா அஞ்ஜனமாகும்.


உலகத்தில் ஒரு மனிதன் எவ்வளவுதான் படித்தவனாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அவன் எப்படிப்பட்ட உத்தமனாக இருந்தாலும் இந்தக் கலிகாலத்தில் மதிப்பே கிடையாது. பணமே ஒருவனுக்கு உயர்ந்த அந்தஸ்த்தையும் செல்வாக்கையும் தருகின்றது. அதுமட்டும் அல்ல. பணம் பாதாள லோகம் வரை பாய்கிறது. மேலும் பணம் இல்லாதவனை உலகம் மதிப்பதே இல்லை அப்படிப்பட்ட பணமோ ஒருவர்கையிலும் அவ்வளவு சுலபமாகத் தங்குவது கிடையாது.


மகாலட்சுமியின் பூரண கடாட்சமான பணத்தைத்தேட ஒவ்வொரு வரும் காலை எழுந்தது முதல் இரவு ஓய்வு எடுக்கும் வரை படாதபாடு படுகின்றார்கள். சிலருக்கு எப்படியாவது பணத்தைச் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் சதா சர்வகாலமும் யோசனையுடன் இருக்கின்றார்கள். சிலர் ரேஸ், லாட்டரிச் சீட்டு மற்றும் சூதாட்டத்திலாவது அதைச் சேர்த்துவிட வேண்டுமென்ற ஆசையுடன் பல வழிகளை நாடிய படியே இருக்கின்றனர். மேற்படி அஞ்ஜனத்தை முறைப்படி உபயோகம் செய்து வந்தால் எப்படிப்பட்ட தரித்திரத்திலும் குபேர சம்பத்தை அடைந்து விடுவர் என சாஸ்திரம் கூறுகின்றது.


குடும்பத்தில் ஏற்பட்ட சகல சாபம், முன்கர்மவினை அடியோடு அகலும். நல்ல தனவசதி தொழில்மேன்மை, அனுகூலம், சுகம், அதிர்ஷ்டம், லட்சுமிகடாட்சம், சுகபோகம் இவை உண்டாகும். தெய்வ அனுகூலம் ஏற்படும். மீண்டும் பிறவாவரம் கிட்டும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் யோகமும், அதிர்ஷ்டமும் சுகஅனு கூலங்களும் ஏற்படும்.உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியிலும், புருவத்திலும் இட்டுக் கொள்ள வேண்டும்.


11. ஜெயமங்கள அஞ்ஜனம்

இந்த அஞ்ஜனத்தை குழந்தைகளுக்கு நெற்றிக்கு இட்டுவர சர்வ கிரக, பாலகிரக தோஷங்கள் அடியோடு விலகிவிடும். திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப்பெண்கள் தினம் காலை, மாலை நெற்றிக்கு இட்டுக் கொள்ள திருமணம் தடையின்று நடைபெறும்.


புருஷவசியம் தேவைப்படுவோர் புருஷனுடன் நல்ல அந்நியோன்யமாக இருப்பதற்கும், குடும்பத்தில் அமைதி, சுகம், அதிர்ஷ்டம் பெருகவும், நல்ல அழகு, வசீகரம், இன்பம் இவைகளுக்கும், இந்த அஞ்ஜனத்தை உபயோகம் செய்து வரலாம். குழந்தைகளுக்கு நெற்றியில் வைக்க பூரண கல்வி அறிவு உண்டாகும். செய்வினை தோஷத்தால் பிடிக்கப்பட்டவர்கள் தினம் இரவில் அஞ்ஜனத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள நல்ல தூக்கம் கொடுக்கும். கெடுதல்கள் யாவும் பூரணமாக நீங்கிவிடும் எப்படிப்பட்ட செய்வினைகளையும் நீங்கும்.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.


12. சர்வ வசிய அஞ்ஜனம்

சிலருக்கு எவ்வளவு பெயர், கைராசி இருந்தாலும், முகராசி இல்லாததால் உலகில் பிரகாசிக்க முடிவதில்லை. சிலருக்கு அபாரமான பாண்டித்யம் இருந்தும் புகழ் ஏணியில் ஏறமுடியாதபடி மங்கிவிடுகின்றனர். இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் பக்தி, நம்பிக்கை இருந்தும் கடவுள் அருள்கிட்டாமல் போய்விடுகிறது. சிலருக்கு ரத்தம் சுண்ட உழைத்தும் யாவரிடமும் பெயர் வாங்க இயலாமல் போய்விடுகின்றது. இன்னும் சிலருக்கு எவ்வளவு வரவு வந்தாலும், சதா பற்றாக்குறை, முக்கியமாக ஜனவசியம், தனவசியம், முகவசியம், மனவசியம், தேவதாவசியம், வித்யா வசியம், ஞானவசியம், ஸ்திரீவசியம் இவைகளுக்கு இந்த அஞ்ஜனம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். டாக்டர்கள், வக்கீல்கள், விரிவுரையாளர்கள், உபாத்தியாயர்கள், குருமார்கள், வேதவிற்பன்னர்கள், ஜோதிடர்கள், அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பெரிய ஸ்தானம் வகிப்பவர்கள், ஹோட்டல், சினிமாத் தியேட்டர், பஸ், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இந்த அஞ்ஜனம் பெரும் பலனைக் கொடுக்கும்.


உபயோகிக்கும் முறை:

துளி எடுத்து தேங்காய் எண்ணையில் கலந்து ஒரு துளி உச்சந்தலையில் தடவிக்கொண்டு வர லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும். ஜனவசீகரம் வேண்டுவோர் ஒரு வெற்றிலையில் இந்த அஞ்ஜனத்தை தடவி வெயிலில் வைத்து உருகும் பக்குவம் வந்தவுடன் சூரிய பகவானை நமஸ்காரம் செய்து உச்சந்தலையில் அதை தடவிக்கொண்டு 15 நிமிடம் கழித்து குளிக்கவேண்டும். இப்படி 67 நாட்கள் செய்தால் ஜனவசீகரம் உண்டாகும்.


இதை சாம்பிராணி தூபத்திலும் போடலாம்..

13. பாதாளமூலிகை அஞ்ஜனம்

பாதாளமூலிகை அஞ்ஜனம் வீட்டில் உள்ள செய்வினை தோஷங்கள் ஏவல், பில்லி சூனியங்களால் கிரகத்தில் ஏற்பட்ட தீமைகள், பூமிக்கு அடியில் உள்ள தோஷங்களையும் இது காட்டி விடும். கல்லாப்பெட்டிகள், பணம் வைக்கும் பெட்டிகளில் துளி தடவ சகல தரித்திரமும் பஞ்சாய் பறந்து விடும். ஆடு, மாடு, கோழிகள், கால்நடைகளுக்கு பௌர்ணமி தினம் தடவி விட தோஷமும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் சேமமாய் நன்றாக வளரும். வீட்டில் வாசல் கதவுகளுக்கு மேல் உள்பக்கமாக தடவி (பிரதி வெள்ளிக்கிழமை) தூபம் காட்ட பெரும் ஜஸ்வர்யத்தை தரும். கிணற்றில் உள்ள தோஷங்கள் நீங்க தேங்காய் உடைத்து அதனுள் 9 வெற்றிலையில் இந்த அஞ்ஜனத்தை தடவி தேங்காய்க்குள் வைத்து தேங்காயை மூடிக் கட்டி கிணற்றுக்குள் புதைத்து விட கிணற்றில் உள்ள தோஷங்கள் விலகிவிடும். இந்த அஞ்ஜனத்தை சாம்பிராணி சட்டியில் தடவி காலை மாலை தூபம் போட பெரும் பலன் கிட்டும். அந்த அஞ்ஜனத்தை பேய் பிடித்தவர்களுக்கு ஒரு துளி எடுத்து தினம் காலை வெறும் வயிற்றில் 5 வெற்றிலையில் தடவி மடித்து உண்ணக் கொடுக்க (48 நாட்கள்) பேய், பிசாசு, உன்மத்தம் அடியோடு நீங்கி சர்வ மேன்மை உண்டாகும்.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.


14. கோச்சார துர்பல நிவாரண அஞ்ஜனம்

இந்த அஞ்ஜனம் அற்புத யோகபலன் தரக்கூடியது. எப்படிப்பட்ட கோச்சார பலஹீனங்கள் திசாபுத்தி கோளாறுகள், கிரக பலஹீனம் இவற்றை நீக்கி வாழக்கையில் திட்டமிட்டபடி எதையும் செய்யக்கூடிய சக்தியை தரக்கூடியது இது. வியாபார மேன்மை, தொழில் விருத்தி, தனலாபம், யோக சித்தி, நற்காலம், இவைகளை தரும். இதை பூஜை செய்யும் பொழுது சாம்பிராணி புகை போடுவது போல் போட்டுவர மகாபலன் கிட்டும்.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.


15. அஷ்டம சித்து மகா அஞ்ஜனம்

இந்த அஞ்ஜனத்தைக் கொண்டு எப்படிபட்ட சத்ருவையும், வசியப் படுத்திவிடலாம். பக்தி, முக்தி, சித்தி, ஞானம், மோட்சம், தனம், சுகம், இஷ்டசித்தி அடையலாம். பெரும்சக்தி வாய்ந்தது இது.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.


16. வீரிய விருத்தி அஞ்ஜனம்

இந்த அஞ்ஜனம் பல முனிவர்களாலும், சித்தர்களாலும் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அஞ்ஜனம் பூரண ஆண்மையைத் தரும். மேலும் சிறு வயதில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளினால் இழந்த ஆண்மை, வீரம், பலம், சுகம் இவைகளை மீண்டும் கிடைக்கச் செய்யும். போக சக்தியை அதிகரிக்கும். தேஜஸ் ஏற்பட்டு தேக காந்தி உண்டாகும்.


உபயோகிக்கும் முறை:

தினம் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டு கொள்ளவும்.


மேலே உள்ள அஞ்ஜனங்கள் தேவைப்படுவோர் எந்த அஞ்ஜனம் தேவை என்பதை விளக்கமாக கடிதம் மூலமாகவோ, இமெயில் மூலமாகவோ,தொலைபேசி மூலமாகவோ தெரிவித்து விபரங்கள் பெற்று PAYMENT DETAILs பகுதியில் பார்த்து பணத்தை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.


தொடர்பு கொள்ள

ஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி

Sri Vetrivel Jothidalayam Trust, Palani

  Phone -   போன்
:
04545 – 245840
 Cell  -   செல்
:
+91 94430 45840,
+91 75980 38063
 Email ID  - மின்னஞ்சல்
:
velanvak@gmail.com,
contact@vetriveljothidalayam.com

  Address :
  41-A, Jawahar Street,
  Opp to Thiru Aavinangudi Temple,
  Adivaram, Palani,
  Dindugal(D.T)-624601,
  Tamilnadu State, South India.
  முகவரி :
41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.