''செய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகள் இவைகளினால் பாதிக்கப்பட்டு முடக்கமான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகை அருளப்படும்''.

சித்தர்கள் தாம் எழுதிய ஓலைச்சுவடிகள் வாயிலாக ஏவல், பில்லி, சூனியம் என்பவற்றை விவரிப்பதே "பூத சாஸ்திரம்" என்பதாகும்.


இந்த விஞ்ஞான உலகில் பேய், பிசாசு உண்டா? இறந்த மனிதர்களின் ஆவி உலாவுகிறதா? என்ற கேள்வி உண்டு. அதற்கு பாம்பாட்டி சித்தர் உயிர் உடலைவிட்டு வெளியில் வந்ததும் அது சூட்சும சரீரம் கொண்டு அலையும். அதனை பேய் என்பது உண்மை என்கிறார் பாம்பாட்டி சித்தர்.


ஆவி, பேய் என்பது பார்ப்பதற்கு இறப்பதற்குமுன் உடல் எப்படி தோற்றத்தில் இருந்ததோ அதே வடிவை ஒத்து இருக்கும். பேயை தொடும் அளவில் அதன் உடல் இராது. ஆனால் பேய்க்கு நம்மை தொடவும் முடியும். பேய்க்கு நம்மை அடிக்கவோ, இம்சிக்கவோ முடியும் என்கிறார் ராமதேவர் எனும் சித்தர்.


நிறைவேறாத ஆசைகளோடு இறந்தவர்கள் கொடூரகுணம் கொண்ட பேய்களாக மாறிவிடுவது உண்டு என்கிறது அகப்பேய் சித்தர் பாடல்.


சில ஆவிகள் சிலரை தாக்கி தள்ளிவிடுவதுண்டு. சில ஆவிகள் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களில் கோளாறுகளை ஏற்படுத்தி விபத்துக்களை சந்திக்க செய்வதுண்டு. சிற்சில நேரங்களில் உயிர்பலியும் நேருவதும்; உண்டு. இவற்றுக்கு ஆவிகளின் சேட்டைகளே காரணம் என்கிறார் சித்தர் கருவூரார்.


சிலர் மாடியிலிருந்து தவறி விழுந்து விடுவார்கள். சிலர் கால் இடறிவிழுந்து அடிபட்டுவிடும். இதெல்லாம் தொண்ணுற்று ஒன்பது சதவீதம் விபத்துக்கள் அல்ல. ஆவிகளின் வேலையே என்கிறார் புலத்திய சித்தர்.


வலிப்பு நோய், வாதம், இதயநோய், புற்று நோய் போன்ற நோய்கள் எந்தவித தீய பழக்கங்கள் இல்லாதவர்களுக்கும், வருவதை நாம் பார்த்து இருக்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம் ஆவியின் சேட்டையே. நோய் என்றால் மருத்துவரின் கட்டுப்பாட்டில் குணமாகும். மருத்துவத்தின் கட்டுப் பாட்டிலிருந்து விலகி நோய் தாக்கம் அதிகமிருந்தால் இது ஆவியின் சேட்டையே என்கிறது அகத்திய நாடி சுவடி. ஆவியின் தாக்கத்தை அடக்கினால் நோயின் தாக்கம் குறையும்.


நன்கு இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், மருத்துமனைகள், வீடுகள், விவசாய விளைநிலங்கள் திடீரென சில தீய சக்திகளால் (செய்வினை, ஏவல்) போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வருமானம் குறைந்து முடக்கப்பட்டு வருகிறது.


வீடுகளில் ஆவிகளின் தொல்லை, ஆவிகளின்சேட்டையால் தீர்க்கமுடியாத நோய்க்கு ஆளாகிவிடுதல், ஏவல், ஆவிகளினால் வண்டி, வாகனங்களில் விபத்துகள் ஏற்படுதல், ஆவிகளினால் தொழிற்சாலைகள் முடக்கப்படுதல், ஆவிகள் மனிதர்களை பிடித்துக்கொண்டு துன்புறுத்துதல் போன்றவற்றிற்கு சில குறிப்பிட்ட யந்திரங்களை செய்து அவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து வரஆவி, பூத, ராட்சத கோளாறுகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கிறார் புலத்திய சித்தர்.யந்திர பூஜை என்பது விரிந்து பரந்து கிடக்கும் இறையருள்எனும் மகத்தான சக்தியை ஒரு நிலையில் கொண்டுவந்து குவித்து அந்த சக்தியில் துன்பம் எனும் இருளை விலக்கி நன்மையடைவதே ஆகும்.


உலகத்திற்கு நன்மை செய்யும் நோக்கத்துடன் முனிவர்களாலும், சித்தர்களாலும்,முன்னோர்களாலும்யந்திரவழிபாடுஅறிமுகப்படுத்தப்பட்டு வழிவழியாக இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது. யந்திர வழிபாடு செய்யும்பொழுது தெய்வ அருளும், மனோசக்தியும் பெருகிக்கொண்டே வரும்.


கண் திருஷ்டி எல்லோருக்கும் பொதுவானதே. கட்டிடங்கள் கட்டும்போதும், வாகனங்கள் பழையது உட்பட வாங்கினாலும் கண்திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாதது. 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது முதுமொழி. சில பேரின் பார்வையினால் பயங்கரமான நாசங்கள் உண்டாகும். தீய பார்வை உடையோர் கால்நடைகளைப் பார்த்தாலே போதும் அவற்றிற்கும் நோய் உண்டாகிவிடுகிறது. வீடுகளைப் பார்த்தால அதில் வசிப்பவர்களுக்கு பீடை உண்டாகும். வாகனங்களைப் பார்த்தால் விபத்துக்கள், பொருட்சேதம், உயிர்ச்சேதம் போன்றவை உண்டாகும் என்று காகபுஜண்டசித்தர் கூறியுள்ளார்.


நம்மை நாம் தற்காத்துக்கொள்ள சித்தர்கள் கூறிய அரிய வித்தையே இந்த ஜோதிடம், வானியல், வேதியியல், கணிதவியல் போன்றன. சொல்ல முடியாத துயரத்தில் நாம் ஆட்படுகையில் நமக்கு உதவும் நிவாரணிதான் இந்த யந்திரங்கள் என்பது உண்மையிலும் உண்மை என்கிறார் கருவூரார். யந்திரங்களை சரியான முறையில் சரியான காலத்தில் செய்து முறை தவறாது பூஜித்து வர எல்லா சுகங்களும் அடையலாம் என்பது கருவூர் சித்தர் வாக்கு.


இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் நிவர்த்தியடைந்து மேன்மை அடைய…


தொடர்பு கொள்ள

ஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட், பழனி

Sri Vetrivel Jothidalayam Trust, Palani

  Phone -   போன்
:
04545 – 245840
 Cell  -   செல்
:
+91 94430 45840,
+91 75980 38063
 Email ID  - மின்னஞ்சல்
:
velanvak@gmail.com,
contact@vetriveljothidalayam.com

  Address :
  41-A, Jawahar Street,
  Opp to Thiru Aavinangudi Temple,
  Adivaram, Palani,
  Dindugal(D.T)-624601,
  Tamilnadu State, South India.
  முகவரி :
41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.