அகில புவனங்களையும் ஆக்க வல்ல இறை அருள் சக்தியால் தன் இயக்கத்தில் ஒரு சிறிதும் வழுவாது இயங்கிவரும் சூரியன், சந்திரன் முதலிய ஒன்பது கிரகங்கள், ராசி மண்டலங்கள் ஆகிய இயக்கத்தின் பலா பலன்களை அறியும் கணித வல்லபமே ஜோதிட சாஸ்திரம் எனப்படும்.


ஜாதகம் என்று சொல்லப்படுவது என்னவென்றால், அவரவர் முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளின் தன்மைகளைப் பார்த்துணர்ந்து நல்வினை செய்தோர் நன்மைகளையும் தீ வினை செய்தோர் தீவினைகளையும் அடையும்படி பிரம்ம தேவன் செய்த கோட்பாடு.


இந்த ஜோதிடத்தின் அடிப்படையில் மாந்தர் தம் வாழ்க்கையில் நடந்து கொள்வதற்கான விதி முறைகளை நன்கு எடுத்துக்காட்டும் சித்திரமாக விளங்குவதுதான் ஜாதகம்.  ஜாதகம் என்பது – திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்,  லக்னம், கிரகங்கள் ஆகிய ஏழு வகை நிலைகளையும் உணர்ந்து அவற்றால் வரும் பயன் கூறுவதாகும்.


யாருக்கு ஜனன குறிப்பு எழுதப்படவில்லையோ அவனுடைய வாழ்நாள் முழுவதும் தீபம் இல்லாத இரவைப்போல் அந்தகாரமாகப் பயன் அற்றுப்போகும் என்பது சான்றோர் வாக்கு. பல பிரச்சனைகளால் மனம் சஞ்சலம் அடையும் பொழுதுதான் உலகத்தையே இயக்கிக் கொண்டு இருக்கும் நவக்கிரகங்களைப் பற்றியும் அவைகளினால் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் மற்றும் நற்பலன்கள் பற்றி தனது ஜாதகத்தில் கண்டு அறிய ஆவல் கொள்கிறான்.


மனிதனை ஆட்டிப்படைப்பது  நவக்கிரகங்கள்; தனது ஆபத்துகாலத்தில் எந்த நவக்கிரகத்தை சரணாகாதி அடைந்து நற்பயன் பெறவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்களா? உங்கள் கேள்விகளுக்கு சிறந்த  ஜோதிட வல்லுநர்களை கொண்டு பதில் கூறி வாழ்க்கையில் வெற்றி பெற விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.


மனிதன் பிறக்கும்பொழுதே அவனது ஊழ்வினைக்கு ஏற்றவாறு அவன் விதி பிரம்ம தேவனால் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. அந்த விதியை முனிவர்களும், ரிஷிகளும் இந்த நேரத்தில் பிறந்தால் இதுதான் நடக்கும் என்று அன்றே எழுதி வைத்துள்ளார்கள். நடப்பது நடந்தேதான் தீரும் என்று இருக்கும் பொழுது அதை தடுத்துவிட ஜோதிடத்தால் முடியுமா? என்று நீங்கள் நினைப்பீர்கள்இதன் காரணமாகவே ஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட் சார்பாக, அதன் மேனேஜிங் டிரஸ்டி,  திருமதி Dr..M.B..பானுமதி M.A .MD.(TM) அவர்கள்,


நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நற்பயன்கள் பற்றி அனுபவபூர்வமாக அறிந்து உணர்ந்து நவக்கிரகங்களால் பாதிப்புக்குள்ளாகி அல்லல்படும் மக்கள் நிவர்த்தி அடையும் பொருட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியம்பதியில் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப் பெருமானின் பேரருளால் வெற்றிவேல் ஜோதிடலாயம் என்கிற அமைப்பை உருவாக்கி அதில் அனுபவம் வாய்ந்த சிறந்த ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு நிவர்த்திக்கு வழிகண்டு பயனடைய வழி வகுத்துள்ளார்.


தெய்வ வழிபாடுகளும்,பரிகாரங்களும், சகல தோசங்களையும், வியாதிகளையும், முடக்கங்களையும் நீக்கி வாழ்க்கையில் சகல செல்வங்களையும், சுகத்தையும் கொடுக்கும் பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் கூட தெய்வத்தின் அருளால் தீர்ந்துவிடும் என்பது பரம்பொருளாகிய சிவனை வணங்கி ஜோதிடசாஸ்திரம் படைத்த ரிஷிகளும் பதினெண் சித்தர்களும் கூறிய வாக்கு.


எனவே இவ்வுலகில் அவஸ்தைக்கு ஆளான அனைவரும் தங்கள் ஜாதகபலன்களை அறிந்து நடந்து கொள்ளவேண்டும் என்பதே வெற்றிவேல் ஜோதிடாலயத்தின் நோக்கம் எனபதை தெள்ளத் தெளிவாக கூறி உள்ளார் Dr.பானுமதி பாக்யநாதன் அவர்கள்.


உங்கள் ஜாதக அமைப்பின்படி


 •   குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு
 •   குடும்ப அமைப்பு, சகோதர அமைப்பு
 •   கல்வி, உத்தியோகம், தொழில் வியாபாரம், விவசாயம்
 •   திருமணம், புத்திரபாக்கியம்
 •   வீடு மனை, பூமி சொத்து, வண்டி, வாகனம்
 •   விவாகரத்து,  கடன், வழக்கு
 •   நோய், வியாதி, கண்டங்கள்
 •   லாபம், விரையம்
 •   வெளிநாட்டுப்பயணம்
 •   கோயில் திருப்பணிகள் மற்றும் தர்ம காரியங்கள் பற்றி


 • "மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள். உள்ளது உள்ளபடி ஜோதிட பலன்கள் சொல்லப்படும்"

  Copyright © Dr.VJB.Bhagyanathan, www.vetriveljothidalayam.com All rights reserved.